டின்டெரில் உள்ள நிகழ்வுகள்

நிஜமான ஆட்டம் இங்கேதான் தொடங்குது

உங்களுக்குப் பிடித்தமான விசயங்களைச் செய்யும்போது, மற்ற சிங்கிள்களைச் சந்தியுங்கள்.
டின்டெர் செயலியில் மேலும் காண்க.

Joust Singles Game Night

ஆக. 13, வியா. · East Village, New York

100+ ஆர்வம் காட்டுகிறார்கள்

டின்டெர் நிகழ்வுகள் அதைத் தளத்திலிருந்து வெளியே கொண்டு வந்து நிஜ உலகிற்குக் கொண்டுவருகிறது.

உங்கள் நகரத்தில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சிகள் முதல் திறந்தவெளி ஒன்றுகூடல்கள் வரை மற்ற சிங்கிள்களைச் சந்தியுங்கள்.

நீங்கள் விரும்பும் நபர் ஏற்கனவே விருந்தினர் பட்டியலில் இருக்கலாம்.

சேர விரும்புகிறீர்களா ?

கூடுதல் விவரங்களை செயலியில் காண்க! கூடுதல் நிகழ்வுகளை ஆராயுங்கள், சரியான இடத்தைப் பாருங்கள், வேறு யார் செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள். அங்கே சந்திப்போம்:)

உங்கள் அடுத்த நிகழ்ச்சிக்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

  • உங்கள் திட்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாகும். அவர்களும் கூட வர விரும்பலாம்!

  • செயலியில் பின்னர் இணைக்கவும்.

    உங்களுக்கு விருப்பம் இருந்தால், தொடர்புத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இன்னும் முழுமையாகத் தயாராக இல்லை என்றால், நீங்கள் டின்டெர் செயலியில் மற்ற பங்கேற்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து சாட் செய்யலாம்.

  • உங்கள் கைபேசியை சார்ஜ் செய்து வைத்திருங்கள்.

    நிகழ்வுகள் புதிய தொடர்புகளை நேரடி உலகிற்கு கொண்டு வருகின்றன, இருந்தாலும் நீங்கள் தொடர்புகொள்ளக்கூடிய நிலையில் இருப்பதும், அதற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியைக் கொண்டிருப்பதும் அவசியம்.

  • நீங்கள் அங்கு எப்படிச் செல்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

    நீங்கள் நீங்களாகவே காரை ஓட்டிச் சென்றாலும் சரி, அல்லது ரைட்ஷேர் அல்லது உதவிக்கு ஒரு நண்பர் என மாற்று ஏற்பாடு செய்து வைத்திருந்தாலும் சரி, வீட்டிற்குத் திரும்புவது எப்போதும் உங்கள் விருப்பப்படியே இருக்க வேண்டும்.

  • உங்களுக்கு எது சரி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    டின்டெரில் உள்ள நிகழ்வுகளைப் பொறுத்தவரை, அனைவருக்கும் ஏற்றவாறு ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கும். 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நிகழ்வுகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ள, நிகழ்வு விவரங்களைப் பாருங்கள்.

நிகழ்வுகள் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டின்டெரில் நிகழ்வு என்றால் என்ன?

டின்டெரில் உள்ள நிகழ்வுகள் என்பவை, நீங்கள் புதிய நபர்களை நேரில் சந்திக்கக்கூடிய, நிஜ வாழ்க்கை மற்றும் விர்ச்சுவல் ஒன்றுகூடல்கள் ஆகும். வெளிப்புற உடற்பயிற்சி நடவடிக்கைகள், பார் இரவுகள் முதல் ஸ்பீட் டேட்கள் வரை பல்வேறு நிகழ்வுகள், ஆண்டு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் கிடைக்கின்றன.

இதில் கலந்துகொள்ள எனக்கு டின்டெர் கணக்கு தேவையா?

இல்லை, ஆனாலும் மேம்படுத்தப்பட்ட நிகழ்வு அனுபவத்தைப் பெற (நிகழ்வுக்குப் பிந்தைய இணைப்பு போன்றவை) செயலியைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். டின்டெருக்குப் புதிதா? தொடங்குவதற்கு செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

நான் எப்படி முன்பதிவு செய்வது?

டின்டெர் செயலியைத் திறக்கவும் நிகழ்வுகள் பகுதிக்குச் சென்று, உங்களுக்கு விருப்பமான நிகழ்வைத் திறக்கவும். முழு அணுகலைப் பெற படச் சரிபார்ப்பு அவசியம். அதன்பிறகு, வருகைப் பதிவு விவரங்களையும், ஆர்வத்தைத் தெரிவிப்பதற்கும், நிகழ்வுப் பங்குதாரர் வழியாகப் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், மற்றும் கலந்துகொள்வதற்குமான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் நீங்கள் காண்பீர்கள்.

டின்டெர் நிகழ்வுகள் இலவசமானவையா?

அது நிகழ்வைப் பொறுத்தது. சில இலவசம், சிலவற்றுக்குக் கூட்டாளர் நிகழ்விடம் மூலம் டிக்கெட் பெற வேண்டும். டின்டெர் செயலியில் உள்ள ஒவ்வொரு நிகழ்விலும் விலை மற்றும் டிக்கெட் இருப்பு ஆகியவை காட்டப்படும்.

யார் கலந்துகொள்ளலாம்?

டின்டெரைப் பயன்படுத்த 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் சில நிகழ்வுகளுக்குக் கூடுதல் வயதுத் தேவைகள் உள்ளன (சான்றாக, மதுபானம் பரிமாறப்படும் இடங்களில் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்). செயலியில் உள்ள ஒவ்வொரு நிகழ்விற்கும் குறிப்பிட்ட தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நான் ஒரு நண்பரை அழைத்து வரலாமா?

பெரும்பாலான நேரடி நிகழ்வுகளில், வயதுத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், முன்பதிவு செய்யும் எவரும் கலந்துகொள்ளலாம். எனவே, உங்கள் நண்பரை (அல்லது நண்பர்களை) தாராளமாக அழைத்து வாருங்கள்! விர்ச்சுவல் ஸ்பீட் டேட் நிகழ்வுகள் மற்றும் இன்னும் சில வடிவங்கள் டின்டெர் பயனர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

ஒரு நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டால் என்ன நடக்கும்?

முற்றிலும் விற்கப்பட்ட நிகழ்வுகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இடங்கள் ஏதேனும் காலியானால் உங்களுக்குத் தெரிவிக்கப்பட, நீங்கள் செயலியில் உள்ள அந்த நிகழ்வை இன்னும் அழுத்தலாம், மேலும் அருகில் வரவிருக்கும் இது போன்ற பிற நிகழ்வுகளுக்கான பரிந்துரைகளையும் நீங்கள் காண்பீர்கள்.

டின்டெர் நிகழ்வுகளில் பாதுகாப்பு எப்படி இருக்கும்?

டின்டெரில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்புக் குறிப்புகளைப் பின்பற்றுகின்றன. கூட்டாளர் நிகழ்விடங்கள் நுழைவாயிலில் பங்கேற்பாளர்களைச் சரிபார்க்கின்றன, மேலும் டின்டெர் செயலியில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களான — தடுத்தல், புகாரளித்தல், படச் சரிபார்ப்பு மற்றும் 24/7 ஆதரவு ஆகியவை — நிகழ்வுக்கு முன்னும், நிகழ்வின்போதும், நிகழ்வுக்குப் பின்னரும் கிடைக்கின்றன.

டின்டெர் நிகழ்வுகள் எங்கே நடைபெறும்?

டின்டெரில் நடைபெறும் நிகழ்வுகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே உள்ளன, மேலும் பல நகரங்கள் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன. உங்களுக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க, டின்டெர் செயலியில் உள்ள நிகழ்வுகள் பகுதியையோ அல்லது events.tinder.com -இல் உள்ள நகர மையங்களையோ பார்வையிடுங்கள்.

டின்டெர் நிகழ்வுகள் அணுகக்கூடியவையா?

ஒவ்வொரு நிகழ்விடத்திற்குமான குறிப்பிட்ட அணுகல்தன்மைத் தகவல்கள், அந்த நிகழ்வின் மூன்றாம் தரப்புப் பட்டியல் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன — உங்களுக்கு ஏதேனும் சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டாலோ அல்லது கேள்விகள் இருந்தாலோ, நிகழ்வுக்கு முன்பாகவே நிகழ்வு ஏற்பாட்டாளரை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செயலியில் மேலும் பல நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கலாமே?சரிதான்.

டின்டெரை டவுன்லோட் செய்

செயலியில் மேலும் பல நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கலாமே?சரிதான்.